நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
மேஷம்:
 
மேஷம்:

எல்லோரும் ஏதோ ஒரு வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடத்தான் வேண்டும். தேடி வரும் வேலையாக இருக்கட்டும்; நாமே சென்று தேடும் வேலையாக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது முயற்சியே ஆகும். அதனால்தான் ஜாதகத்தில் மூன்றாம் இடத்திலுள்ள முயற்சி ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதைப் பொறுத்தே வேலை அமையும். அப்படிப் பார்க்கும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு முயற்சி ஸ்தானம் எனும் மூன்றாம் இடத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். உங்களிடம் இடைவிடாத முயற்சி இருக்கும். அதே சமயம் சிறியதாக அலுப்பும் வரும். நிறைய பேர் கௌரவம் பார்த்து விட்டுவிடுவீர்கள். இரண்டு முறை யாரேனும் அலையவிட்டால், மூன்றாவது தடவை பின்வாங்குவீர்கள். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாகி விடும்.

பொதுவாகவே மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்த நீங்கள் ரோஷக்காரர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பதே பத்தாம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான்தான். மேஷ ராசியை ஆளும் செவ்வாயும், சனியும் பகைவர்கள். அதனால், எப்போதுமே வேலை மாறியபடி இருப்பீர்கள். கடினமாக உழைத்து பதவி உயர்வு பெறும் நேரத்தில், வேறு யாருக்கோ அந்தப் பதவி உயர்வு சென்று விடும். இதுபோல எப்போதுமே ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். விரக்தி மனப்பான்மையுடன்தான் கிட்டத்தட்ட மத்திம வயது வரை வேலை செய்ய நேரிடும்.
எப்போதும் அலுவலக அந்தரங்கங்களை அருகில் இருப்பவர்களிடம் சொல்லக் கூடாது. ஏனெனில், நண்பருக்கு உரிய மூன்றாம் வீட்டிற்கும், எதிரிக்குரிய ஆறாம் வீட்டிற்கும் புதன் அதிபதியாக வருவதால், நெருங்கிப் பழகும் சக ஊழியர்களே எதிரிகளாகவும் இருப்பார்கள். அதுபோல 3, 6ம் வீட்டின் அதிபதியாக புதன் வருவதால், மாறுபட்ட சிந்தனை, பேச்சுக்கள், எழுத்தால் பலராலும் எதிர்க்கப்படுவீர்கள். அலுவலகக் கூட்டத்தில் நீங்கள் பேசினாலே அங்கு ஓர் எதிர்ப்பலை எழுந்து அடங்கும். அதுபோல நீங்கள் படித்த துறையிலேயே பணியாற்றுவது கடினம். பல துறைகளில் பல வருடங்கள் மாறிமாறிப் பணியாற்றியதை உங்கள் பயோடேட்டா காட்டும். ஆனாலும், பெரும்பாலான மேஷ ராசிக்காரர்கள் நிர்வாகத் துறைக்கு வந்து விடுகிறார்கள். செய்வது எந்தப் பணியாக இருந்தாலும், அதில் நிர்வாகம் சார்ந்த துறைக்கு நகர்ந்து விடுவீர்கள். தொழிலாளராக இருந்தால் தொழிற்சங்கத் தலைவர் ஆவீர்கள்.

எப்போதுமே உங்களின் சப் கான்ஷியஸ் மைண்ட் விழித்துக் கொண்டே இருக்கும். அதனாலேயே இரவில் கூட கோழித் தூக்கம்தான் இருக்கும். அலுவலக சம்பவங்களை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். எப்போதுமே தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்கள் எதற்கு இன்னொருவருக்கு தெரிய வேண்டுமென்று நினைப்பீர்கள். மிக முக்கியமான தவறாக மேஷ ராசிக்காரர்கள் செய்வது என்னவெனில், எப்போதுமே வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த மாட்டீர்கள். அதீத தன்னம்பிக்கையில் ஆமையிடம் தோற்ற முயல் போல பல விஷயங்களில் கோட்டை விடுவீர்கள். சோடாவைத் திறந்தவுடன் பொங்குவதுபோல ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் இறுதிவரை நிலைக்காது. அதனால் எப்போதுமே அலுவலகத்தில் சக ஊழியர்களின் பலத்தை சரியாக கவனித்தல் அவசியமாகும். ‘‘நம்மள ஜெயிச்சுட முடியுமா, நம்மை மீறி எதுவும் செய்துட முடியாது’’ என்று நினைப்பதால் இழப்புகளும், ஏமாற்றங்களும் ஏற்படும்.

உங்களின் முக்கிய பலமே, இலக்கை எட்டும்வரை சாதித்து விட்டதாக யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காததுதான்! மேஷ ராசிக்கு 12ம் வீட்டிற்குரியவராக குரு இருப்பதால், பாதி விஷயங்களைச் சொல்லி மீதியை எதிரில் இருப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவீர்கள். இதனால் பலபேர் புரியாத புதிராக உங்களை நோக்குவார்கள். அலுவலக விஷயங்களில் தவறு செய்வோர் மீது சுளீரென்று கோபம் வந்தாலும், மெதுவாக அதை அடக்கி, பொறுப்பான வார்த்தைகளில் வெளிப்படுத்துவீர்கள். இந்த ராசியில் அஸ்வினியின் நட்சத்திர நாயகனான கேது ஒரு நிழல் கிரகமாக வருவதால், இந்த ராசியில் உள்ளோர் எல்லோருக்குமே சுதந்திரமான ஒரு அலுவலகத்தை தன் தலைமையின் கீழ் அமைக்கும் கனவு இருக்கும். மேஷ ராசியின் நாயகனாக செவ்வாய் வருவதால் எப்போதுமே அலுவலகத்தின் உச்சபட்ச அதிகாரியாக ஆகமுடியாவிட்டால் கூட, அவரின் அருகிலேயே வேலை பார்க்கும் தகுதி உடையவர்களாகத்தான் விளங்குவீர்கள். 

வெளி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள் எப்போதுமே நல்ல வளர்ச்சியை கொடுக்கும். ஆனால், சில நேரங்களில் அங்குபோய் வேலைக்கு அமர்ந்தாலும், அங்கும் ஒரு இந்தியர் உட்கார்ந்து தொந்தரவு கொடுப்பார். எப்போதுமே மூத்த சகோதரர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது. அது வியாபாரமாக இருந்தாலும் சேர்ந்து செய்யக் கூடாது. வேலை பார்த்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் புகழ் பெற வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். அம்மாதிரி துறைகளையே தேர்ந்தெடுக்கவும் செய்வீர்கள்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் எடுத்த எடுப்பிலேயே அலுவலகத்தில் மிகத் திறமைசாலியாக பெயரெடுப்பீர்கள். கம்பெனி கொடுத்த இலக்கை அடைவதிலேயே குறியாக இருப்பீர்கள். வீட்டுக்கு வந்த பிறகும் அலுவலக நினைப்பாகவே இருக்கும். உங்களின் நேர்மையை தாக்குப் பிடிக்க முடியாமல் கீழே இருப்பவர்கள் வேலையை விட்டுச் சென்று விடுவதும் உண்டு. ரொம்பவும் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துச் செல்ல மாட்டீர்கள். தலைமை அதிகாரிக்கு அன்றாட அலுவலக நிகழ்வுகளைத் தெரிவித்தபடி இருப்பீர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவுக்கும், வேலையைத் தரும் பத்தாம் இடத்து சனிக்கும் நேரடிப் பகை இருப்பதால், படித்ததற்கு சம்பந்தம் இல்லாமலோ, கற்றுக் கொண்ட தொழிலிலிருந்து விலகி வேறு தொழில் மாறியோ புகழ் பெறுவீர்கள். படித்தது காமர்ஸ் ஆக இருக்கும்; ஆனால், வேலை செய்வது சாப்ட்வேராக இருக்கும்.

அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆசிரியர் வேலைக்கு முயற்சிக்கலாம். ஏதேனும் அறக்கட்டளை சார்ந்த இடங்கள், மருத்துவத்தில் மனநல மருத்துவர், எலெக்ட்ரிகல் துறை, சி.பி.ஐ என்று குறிப்பிட்ட துறைகளில் முயற்சி செய்தால் உயர்ந்த இடத்திற்குச் சென்று விடலாம். இரண்டாம் பாதத்தினருக்கு உரியதே ஐ.டி. துறைதான். அதுதவிர ஆர்க்கிடெக்ட், டயட்டீஷியன் போன்ற துறைகளில் வேலை தேடினால் உடனே கிடைக்கும். கண் மருத்துவத்தில் தனித்த சாதனை படைப்பீர்கள். சுக்கிரன் உங்கள் பாதத்தின் அதிபதியாக இருப்பதால் சினிமாத் துறையில் எப்போதுமே ஒரு கண் இருக்கும். அப்படியில்லாவிடினும் ஏதேனும் அலுவலகத்தில் இருந்து கொண்டே கலைத்துறையிலும் ஒரு கால் பதிப்பீர்கள்.

அஸ்வினி மூன்றாம் பாதத்தினரின் லட்சியமே பத்திரிகைத் துறைதான். பத்திரிகைத் துறையில் நுழைந்தால் உயரப் பறக்கலாம். மேலும் அஞ்சல் துறை, தனியார் கூரியர் சர்வீஸ் போன்றவற்றில் குறுகிய வருடங்களிலேயே உயர் பதவிகள் வந்து சேரும். அது தவிர கன்சல்டன்சி, இன்சூரன்ஸ் ஏஜென்ட், கோயிலில் செயல் அலுவலர் போன்ற பணிகளுக்கு நிச்சயம் முயற்சி செய்யுங்கள். பெயின்டிங் துறையில் தனித்துவத்தோடு திகழ உங்களின் பாத அதிபதியான புதன் உதவுவார். நான்காம் பாதத்தில் பிறந்தவர்களில் கலைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் உண்டு. ஆனாலும், கேட்டரிங் டெக்னாலஜி, சிவில் எஞ்சினியரிங், டெக்ஸ்டைல் போன்ற துறைகளில் நிர்வாகத்தோடு சேர்ந்த வியாபாரத்தையும் தேர்ந்தெடுங்கள். வேலை பார்த்தாலும் எப்போதுமே சுயதொழில் செய்வதில்தான் கவனம் செலுத்துவார்கள்.

No Ads Found
No Ads Found
Helloo Salem Free Advertisements