ஆத்தூர்கோட்டை

இன்றைய நிலையில் சமவெளியில் தமிழ்நாட்டில் இருக்கும் கோட்டைகளில் அழகும் சிறப்பும் வாய்ந்த கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. இது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது..இதற்கான அறிவிப்பு கோட்டைக்குள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது..பழுதடைந்த கட்டிடங்களையும் கட்டுமானங்களையும் தொல்லியல் துறை ஓரளவு சரி செய்து வருகிறது..

 

 

10 ஆம் நூற்றாண்டு முதலே ஆற்றூர் என்று அழைக்கப்பட்டுள்ளது..மைசூர் ஆட்யின் போது அனந்தகிரி என கொஞ்சகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது..தற்போது ஆத்தூர் என்று அழைக்கப்படுகிறது…

ஆத்தூர் வசிஷ்டநதியால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது..

ஆற்றுக்கு கிழக்கில் இருந்து தெற்காக பரவியுள்ள பகுதி புதுப்பேட்டை..பழையப்பேட்டை,
ராணிப்பேட்டை

ஆற்றுக்கு வடக்கே கோட்டையும் முள்ளுவாடி(முல்லைவாடி..?) பகுதியும் உள்ளது..இந்த முல்லைவாடி பகுதியில் கோட்டையில் பணிபுரிந்த அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களும் குடியிருந்ததாய் ஓர் தகவல் உண்டு

ஆத்தூர் கோட்டை சதுரவடிவில் அமையப்பெற்று புற அரண் கட்டுமானங்கள் ..மதில்சுவர் தொடர் வளைந்து திரும்பும் முனைகளிலும், மதிலுக்கு ஒட்டினார் போல் உள்ளது.. புற அரண்கள் வட்ட வடிவ உருண்டை கட்டுமானங்களாக உள்ளது..

இந்த கோட்டையை கட்ட கற்கள் அருகிலிருந்த கல்வராயன் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்..

கோட்டைக்குள் இதுவரை இரண்டு தானிய கிடங்குதான் உள்ளது என நினைத்திருந்தேன்…ஆனால் மூன்றாவதாய் ஓர் தானிய கிடங்கு உட்புறமாக முழுமையாய் நல்ல நிலையில் இருப்பதை நேற்றைய கள ஆய்வில் கண்டேன்..

கோட்டையை சுற்றிலும் ஆற்றின் இரு கரையிலும் நிறைய கோவில்கள் உள்ளன..

காளியம்மம்,செல்லியம்மன்,கைலாசநாதர் கோயில், மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும்

கோட்டைக்குள் காயநிர்மலேஸ்வரர்( திருமேற்றளி நாயனார்) கோயில்,பெருமாள் கோயில்,விநாயகர் கோயில் போன்றவை உள்ளன..

நன்றி.ஆறகழூர் வெங்கடேசன் பொன்

 

 

 

Source :

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.