ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்

 

சென்னை: ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18ஆம் தேதி வியாழக்கிழமை மகா நவமி நாளில் பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை சாமி கும்பிட நல்ல நேரம் உள்ளது. இதே போல அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்.

நவராத்திரி பண்டிகை 9 நாளும் அம்மன் கொலு வைத்து பூஜை செய்து வணங்குவார்கள். ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

Image result for ஆயுதபூஜை

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். அதற்கேற்ப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நல்ல நேரம்

இந்த ஆண்டு ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய அக்டோபர் 18ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 2.06 மணி முதல் 2.52 மணி வரை நல்ல நேரம் உள்ளது. நவமி திதி அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் 12.49 மணிக்கு தொடங்கி 18ஆம் தேதி 3.28 மணிவரை உள்ளது.

விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்

விஜயதசமி நாளில் சாமி கும்பிட அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.05 மணி முதல் 2.51 மணிவரை நல்ல நேரம். சாமி கும்பிடலாம்.

Related image

 

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.