கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்

201611280902054385_natural-ways-to-crumble-in-ovarian-cysts_secvpf

தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். கருப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால், சில சமயம் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான வலி, தசைப்பிடிப்புகள், மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, உடலுறவின் போது வலி, முதுகு அல்லது தொடைகளில் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கருப்பை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு முன், இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். இயற்கை வழிகளால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன், விரைவில் நல்ல பலனும் கிடைக்கும். இங்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகளை கீழே பார்க்கலாம்.

சுடுநீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும். குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்றும் மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.

சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.

thanks to maalaimalar.com

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.