கிரஞ்சு மாளிகை

#helloosalem #salemhistory #yercaud
சேலத்தின் சரித்திர முக்கியதுவம் பெற்ற கிரஞ்ச் மாளிகை..

ஆப்கான் மன்னர்கள் சிறை வைக்கப்பட்ட ஏற்காடு கிரஞ்சு மாளிகை

மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் #சேலம்#ஏற்காடு. வரலாற்று பக்கங்களில் பதிவு செய்யப்படாத பல நிகழ்வுகள், இங்கே அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் மன்னர்களை சிறை வைத்த கிரஞ்சு மாளிகை, நூற்றாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. ஏற்காடு மான்போர்டு பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பழமை வாய்ந்த காப்பி தோட்டங்களுக்கு மத்தியில் இருக்கிறது இந்த கிரஞ்சு மாளிகை. ஏற்காட்டில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் மாளிகை என்ற பெருமையும் இதற்கு உண்டு.
கி.பி.1820களில் சேலம் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த டேவிட் காக்பர்ன் என்பவரால் கோடை காலத்தில் பாதுகாப்பாக தங்குவதற்காக காட்டேஜ் பாணியில் இந்த மாளிகை கட்டப்பட்டது. இரண்டு அடுக்குகளில் விசாலமான அறைகளை கொண்டும் 20ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாதுகாப்பான ஒரு கோட்டையை போல் வடிவமைத்து #கிரேஞ்ச்#மாளிகைகட்டப்பட்டுள்ளது. மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் அரேபிய தீபகற்பத்திலிருந்தும், சைபீரிய நாட்டிலிருந்தும் ‘‘காப்பியா அராபிக்கா’’ என்ற உயர் ரக காப்பி செடிகள் கொண்டு வந்து பயிரிடப்பட்டது என்பது அரியதகவல்.

Image may contain: sky, cloud, house, tree, plant and outdoor

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் மன்னராக இருந்தவர் அயூப்கான். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு தோற்ற அயூப்கான் மற்றும் அவரது 7 மகன்கள், மருமகள்கள், குழந்தைகள், வேலைக்காரர்களை என அனைவரையும் கைது செய்து அலகாபாத்தில் சிறை வைத்தனர். இந்த நேரத்தில் முதல் உலகப்போர் துவங்கியது. ஆப்கானிஸ்தானிலும் பிரச்னை எழுந்தது. அப்போது சிறை வைக்கப்பட்டவர்களை இந்தியாவின் தென்கரையோர பகுதிக்கு கொண்டு வர முடிவு செய்தனர். சேலம் ஏற்காட்டிற்கு அயூப்கான் குடும்பத்தினரை ரயிலில் கொண்டு வந்து கலெக்டர் லீ யிடம் ஒப்படைத்தனர். அயூப்கான் குடும்பத்தினரை பிரிட்டீஷ் அரசு உத்தரவுப்படி, 1917ம் ஆண்டு மே 17ம் தேதி கிரஞ்சு மாளிகையில், அயூப்கான் குடும்பத்தை சேர்ந்த சுல்தான் அகமது கான், அப்துல் அஜீஸ்கான், ஷேர் அகமது கான், நூர் அகமது கான், முகமது சர்வர்கான், உமர்கான், அப்துல் ரஷீத்கான் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கலெக்டர் லீ சிறை வைத்தார். ஏற்காட்டின் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு ஒத்துப்போனது.

இந்தியாவின் வட மாநிலங்களில் சிப்பாய் கலகம் ஏற்பட்ட நேரத்திலும் ஏற்காடு கிரேஞ்ச் மாளிகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த கலவரம் சேலத்திற்கு பரவினால் பாதுகாப்பு இருக்காது என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு அதிகாரிகள் கிரஞ்சு மாளிகைக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் இந்த மாளிகை மீண்டும் பலப்படுத்தப்பட்டது. சேலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மூன்று பீரங்கிகளும் கிரஞ்சு மாளிகையை சுற்றிலும் நிறுத்தப்பட்டது.
கிரஞ்சு மாளிகையும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நிலங்களும் பின்னர் ஹுசைன் சேட் என்பவரின் பாதுகாப்பில் இருந்து வந்தது. தற்போதும் அவரது வழித்தோன்றல்கள் பராமரித்து வருகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகமும், தமிழக அரசும் இதை பதிவு செய்தால், அரிய நிகழ்வுகளை மக்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார் இந்திய வரலாற்று சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ்..
மேலும் உங்களுக்கு இதை பற்றிய அரிய தகவல்கள் இருந்தால் comment box ல் பதிவு செய்யவும்..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.