சேலத்தின்சிறப்புகள் சேலம்பட்டுவேஷ்டி

#சேலத்தின்சிறப்புகள் #helloosalem
#சேலம்பட்டுவேஷ்டி….

 

 

திருமணம், கிரஹ பிரவேசம், பொங்கல், தலைதீபாவளி உள்பட பல்வேறு சுப தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழர்கள் பட்டு வேட்டி அணிவது வழக்கம். பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த பட்டு வேட்டி, ஒரு ஆண் மகனின் மதிப்பு மற்றும் மரியாதையை எடுத்து காட்டுவதாக அமையும். குறிப்பாக பட்டு வேட்டி சட்டையில் எந்த ஆணும் கம்பீரமாகவே காணப்படுவான். அதேபோல பட்டு சேலை. பட்டு.. செல்லம் என்று காதலனாகட்டும், கணவனாகட்டும், தாய் ஆகட்டும் ஒரு வரை கொஞ்சும்போது, முதலில் சொல்லும் வார்த்தை பட்டு.. காரணம் அந்த அளவுக்கு மென்மையாகவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும், பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும் வல்லமை பட்டுக்கு உண்டு. எனவே, தான் கொஞ்சலில் கூட பட்டு முதலிடம் பிடிக்கிறது

 

#கம்பீரம்தரும்சேலம்பட்டுவேட்டி..

தமிழகத்தில் பட்டு சேலை என்றால் காஞ்சிபுரம். அதுபோல் பட்டு வேஷ்டி என்றால் அது சேலம் தான். இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேஷ்டிகளுக்கு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு தமிழர்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இப்போதும் தமிழகத்தில் பல விஐபி வீட்டு திருமணங்களுக்கு சேலத்தில் இருந்து தான் பட்டு வேஷ்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன…
Like our FB page to get regular updates
https://www.facebook.com/helloosalem/

 

 

 

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.