நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

201609010115194999_Temple-began-with-the-hoisting-of-a-flag-Nellaiappar-Aug_SECVPF

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 10–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ஆவணி மூலத்திருவிழா

பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6.15 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

4–வது நாள் திருவிழாவான 3–ந் தேதி காலையில் சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகியோர் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா வருகிறார்கள்.

காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

8–ந் தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர், நெல்லை டவுன் 4 ரதவீதிகளையும் சுற்றி சங்கரன்கோவில் ரோடு வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஆவணி மூல திருவிழாவின் 10–வது நாளான 9–ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு, நெல்லையப்பர் கோவிலில் இருந்து சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்கிலிய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் டவுன் 4 ரதவீதிகளும் சுற்றிவந்து மானூக்கு 10–ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறார்கள்.

அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சி அளித்து, சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.15 மணிக்கு வரலாற்று புகழ் மிக்க புராணப் பாடல் பாடப்பெற்ற ஆவணி மூல மண்டபத்தில் சுவாமி–அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

 

 

 

 

 

 

Thanks to dailythanthi.com

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.