பொட்டுக்கடலை – கருணைக்கிழங்கு வடை

பொட்டுக்கடலை - கருணைக்கிழங்கு வடை
தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை – 150 கிராம்,
கருணைக்கிழங்கு – 200 கிராம்,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
இஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
பட்டை, சோம்பு – சிறிதளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

கருணைக்கிழங்கைத் தோல் சீவி, நன்றாகக் கழுவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.

இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, சமையல் சோடா சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து வடை மாவு பதத்துக்குப் பிசையவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

source    maalaimalar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.