ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கான கவசம்

ராகு - கேது தோஷம் உள்ளவர்களுக்கான கவசம்
சித்திர வண்ணமே திருந்து மேனியு
மத்துவசம் பொரு மணிகொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் தொண்டருள்
வைத்தமா கேதுவை வணக்கம் செய்குவோம்.

சித்திர வண்ணன் காக்க
சிரம் நெற்றி தூம வர்ணனன்
நித்தமும் காக்க நாட்டம்
நீடு பிங்காட்சன் காக்க
பத்தாகை தொழும் செங்கண்ணன்
பளகறு செவி புரக்க
வித்தநோ மேனி அண்ணல்

மேம்படு நாசி காக்க
சிங்கிகை அளிக்கும் மைந்தன்
திருமலி சுபுகம் காக்க
கங்குலும் பகலும் கேது
சுந்தரம் காக்க கந்தம்
பொங்கு ஒளிக் கிரகநாதன்
புரக்க தோள்புலவர் கோமான்
அங்கு அமர்ந்து அளிக்க உந்தி
அரவுரு அமைந்தோன் காக்க

காண்டகு கோரரூபன்
கடிதடம் புரந்து காக்க
மாண்டகு மருங்குல காக்க
வான்வரும் அசுரர் கோமான்
துண்டகு தொடை இரண்டும்

சடாச்சிரம் பெரியோன் காக்க
வேண்டகு கோபமூர்த்தி
எழின் முழந்தாள் புரக்க
வெற்றி சேர் குரூர ரூபன்
மேம்படு பதம் புரக்க
பற்றிலா மக்கள் யாவர்க்கும்

பலவகைத் துன்பஞ் செய்யும்
செற்றமார் கிரகவேந்தன்
தெரிக்கும் என் அங்கமெலாம்
அற்றமொன் றானுமேவாது
அமர்ந்து ராப்பகல் காக்க.
காண்டகு கேதுவின் கவசம் போற்றிடின்

மூண்டெழு பகையெலா முடிந்து மாய்ந்திடும்
வேண்டுவ யாவையும் விரைவின் எய்திடும்
பூண்டை நோய் போமெனப் புகழும்
நூல் எல்லாம்.
அடுத்து வருவது ஸ்கந்த புராணத்தில் உள்ள
கேது பஞ்சவிம்சதி நாம ஸ்தோத்திரம்.

இதைப் பாராயணம் செய்தால் எல்லா கஷ்டங்களும் விலகும்.
தான்யம், பொருள், பசுக்கள் விருத்தியாகும்.
கேது கால கலாயிதா தூம்ரகேதூர் விவாணக:
லோககேதுர் மஹாகேது: ஸர்கேதூர்பசுப்ரத:
ரெளத்ரோ ருத்ரப்ரியோ ருத்ர க்ரூரகர்மா
ஸுகந்தத்ருக

பாலால தூமஸமகாச:
சித்ரயக்னோபவீதத்ருக:
தாராகண விமர்தீ ச ஜைமினேயோ க்ரஹாதிப:
கணேச தேவோ விக்னேச
விஷரோகார்திநாசன:

ப்ரவ்ராஜ்யதோ க்ஞானதச்ச தீர்த்தயாத்ராப்ர வர்த்தக:
பஞ்சவிம்சதி நாமானி கேதோர்ய: ஸததம் படேத்
தஸ்ய நச்யதி பாதா ச ஸர்வாகேது ப்ரஸாதத:
தனதான்யபசூநாம் ந பவேத் வ்ருத்திர் ந ஸம்சய:

source  maalaimalar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.