வாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்

வாயு தொல்லையை போக்கும் பூண்டு ரசம்
தேவையான பொருட்கள் :

பூண்டு – 15 பல்,
மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
புளி – நெல்லியளவு,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – 10 இலைகள்,
கடுகு, நெய் – தலா கால் டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

புளி கரைத்த தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.

வாணலியில் நெய் விட்டு உருகியதும் கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பூண்டு ரசம் ரெடி.

Source maalaimalar

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.