சேலத்தின்சிறப்புகள்

சேலம் கிழக்கிந்திய கம்பெனியின் குடிமைப் பணியில் இருந்த ஜோஷியா மார்ஷெல் கீத் என்பவர்தான் சேலம் கஞ்சமலை பகுதிகளில் இரும்புத் தாது இருப்பதை முதலில் கண்டிறிந்தவர்.

 

அதன்பிறகு அவர் சேலம் அருகிலுள்ள பூலாம்பட்டியில் 1847இல் இரும்பு தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவி, நிதி நெருக்கடியின் காரணமாக 1858இல் அந்த ஆலையை மூடிவிட்டார். கீத்தால் தயாரித்து இங்கிருந்து அனுப்பப்பட்ட இரும்பால்தான் இங்கிலாந்தில் பிரிட்டானியா டியூப்ளார் பாலமே (குழந்தைகள் பாடலில் வரும் லண்டன் பிரிட்ஸ்) கட்டப்பட்டது என்ற செய்தி இப்போதைய தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும். சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியா-வின் ரெட்டை கோபுரம், மெல்பேர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன.

சேலத்தைச் சேர்ந்த அருணாசலம் தயாரித்த உருக்கு வாள் லண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் அவரது பெயரோடு சேலம், தமிழ்நாடு என்று எழுதப்-பட்டு காட்சிக்கு வைக்கப்-பட்டுள்ளது. 1893இல் தாமஸ் ஷொலாண்டு, 1917_18இல் டாக்டர் வி.எஸ்.துவே, 1944இல் எம்.கே.என். அய்யங்கார் ஆகியோர் கஞ்சமலை இரும்புத் தாதுவை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கைகள் வழங்கினர்.

1960க்குப் பின் தமிழக அரசால் இந்த உருக்காலைக்கு 24,000 ஏக்கர் நிலம் கையகப்-படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து ஜப்பான் நாட்டோடும் ஆலோசனை மேற்கொள்ளப்-பட்டு 2.5 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யலாம் என்று 1966இல் தமிழக அரசு ஓர் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. 1970இல் சேலம், விசாகப்பட்டினம் விஜயநகரில் உருக்காலைகள் அமைக்க, மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு செய்தது. 1973இல் சேலம் உருக்காலை இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்-பட்டு முதல் கட்டமாக ரூ.136 கோடி மூதலீட்டில் 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் குழு உருட்டாலை திட்டத்துக்கு மத்திய அரசு 1977இல் ஒப்புதல் அளித்தது.

பெருகிவரும் எவர்சில்வரின் தேவையைச் சமாளிக்க சேலம் இரும்பாலை முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் இரும்புத் தகடுகள் ஜப்பான், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த எவர்சில்வர் தகடுகள் உற்பத்தியில் பன்னாட்டு அளவில் 12 பெரிய உற்பத்தி-யாளர்களில் சேலம் ஆலையும் ஒன்றாகும்.

 

 

News source unmaionline.com

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.