நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்
 

15/11/2016 Time:11:38 Am

புதிய ரூபாய் நோட்டுகள் நல்லவை தானா என்பதைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய 2,000 ரூபாய் நோட்டில் 7 கோடுகள் (பிளீட் லைன்ஸ்) அதன் பக்கவாட்டில் இருக்கும். இதேபோல 500 ரூபாய் நோட்டில் 5 கோடுகள் இருக்கும். மேலும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் அதன் மதிப்புத் தொகை சற்று புடைப்பாக (இன்டாக்லியோ) அச் சிடப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டு களில் வழக்கமாக இடம்பெறும் பாதுகாப்புக் கோடு புதிய நோட்டு களில் நீல நிறத்தில் இருக்கும். முந்தைய நோட்டுகளில் இவை பச்சை நிறத்தில் இருந்தன.

அதேபோல 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் வலது புறத்தில் அவற்றின் நிறம் சற்று மாறும். அதை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது தெரியும்.

இவை அனைத்தையும் மிக எளிதில் சாதாரண மக்களால் கண்டுபிடித்துவிட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் கள்ள நோட்டு அச்சிடுவது சிரமம் என்றும் அவர் கள் தெரிவிக்கின்றனர். 2000 ரூபாய் நோட்டுகள் மெஜந்தா நிறத்திலும் 500 ரூபாய் நோட்டுகள் கிரே நிறத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.

2000 ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி (புதிய) சீரிஸ் படமும், மங்கள்யான் படமும் இடம்பெறும். இதன் அளவு 66 மி.மீ மற்றும் 166 மி.மீ. ஆகும்.

2,000 ரூபாய் நோட்டை விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது 2,000 என்ற எழுத்து தெரியும். ஆர்பிஐயின் பாதுகாப்பு கோடு மற்றும் 2,000 என்ற எண்ணும் தெரியும். மகாத்மா காந்தி உருவம், நீர்க்கோடு (வாட்டர் மார்க்), அதேபோல 2,000 எண் எலெக்ட்ரோ டைப் முறையிலும் தெரியும்.

நோட்டுகளின் எண் வரிசை சிறிதாக தொடங்கி பிறகு பெரிய அளவினதாக இருக்கும். இது ஒவ்வொரு தாளின் இடது பக்க மேல்புறம் மற்றும் வலது புறம் கீழே இடம்பெறும்.

நோட்டின் பின்புறத்தில் ஸ்வாச் பாரத் லோகோ, மங்கள்யான் படம், 2016-ம் ஆண்டும் இடம்பெற்றிருக் கும். பார்வை குறைபாடு உள்ள வர்கள் கண்டறியும் வகையில் வலது புறம் மேல்பக்கத்தில் 500 சற்று புடைப்பாக அச்சிடப்பட்டிருக் கும். பின்புறத்தில் ஸ்வாச் பாரத் லோகோ மற்றும் டெல்லி செங்கோட்டை படம் இடம்பெற் றிருக்கும். அத்துடன் 500 ரூபாய் நோட்டில் தேவநாகரி எழுத்து இடம்பெற்றிருக்கும்.

 

 

 

thanks to tamil the hindhu...

Helloo Salem Free Advertisements