நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு விதை, உரங்கள் தேவையான அளவு கையிருப்பு அதிகாரிகள் தகவல்
 

சேலம், : சேலம் மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் இருப்பு உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான்தெற்கு, தேவியாகுறிச்சி ஆகிய பகுதிகளில், வேளாண்மை துறையின் சார்பில் ேமற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: 

சேலம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு தேவையான 75 மெட்ரிக் டன் நெல் விதைகள், 17 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகள், 139 மெட்ரிக் டன் பயறுவகை விதைகள், 39 மெட்ரிக் டன் எண்ணெய் வித்து விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் பருவத்திற்கு தேவையான 358 மெட்ரிக் டன் நெல் விதைகள், 43 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகள், 34 மெட்ரிக் டன் பயிறு வகை விதைகள், 105 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துகளின் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாக, 13,842 மெட்ரிக் டன் யூரியா, 8,544 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 11,234 மெட்ரிக் டன் பொட்டாஸ், 16,986 மெட்ரிக் டன் கூட்டு உரங்கள் ஏற்கனவே விவசாயிகளுக்கு விநியோக்கப்பட்டுள்ளது. வரும் பருவத்திற்கு தேவையான யூரியா 11,953 மெட்ரிக் டன், பொட்டாஸ் 8,233 மெட்ரிக் டன், டி.ஏ.பி 10,945 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் மருந்துகள், நுண்ணூட்டங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



thanks to dhinkaran.com

Helloo Salem Free Advertisements