நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
கொல்கத்தா அணி வெற்றி ‘குவாலிபையர் 2’க்கு தகுதி;பந்து வீச்சாளர்களுக்கு காம்பீர் பாராட்டு
 

18/05/2017 Time 12:01 Pm

பெங்களூர், 


பெங்களூரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத்  முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி வீரர் களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி திணறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால்   7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 35 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில்  2 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும்.  வில்லியம்சன்  24 ரன் எடுத்தார். நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 2 விக்கெட்டும், போல்ட், பியூஸ் சாவ்லா தலா 1 விக் கெட்டும் எடுத்தனர்.

பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்வதற்குள் மழையால் ஆட்டம்  பாதிக்கப்பட்டது.நள்ளிரவு 1 மணி அள வில் மழை விட்ட பிறகே போட்டியை நடத்த முடிந்தது.
டக்வொர்த் லீவிஸ் விதிப்படி  கொல்கத்தா அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 4 பந்து எஞ்சி இருந்த நிலையில் கொல்கத்தா எடுத்தது.

கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கொல்கத்தா 2 விக்கெட்டை இழந்தது. கிறிஸ்லின்  6 ரன்னில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்தில்  யூசுப் பதான் ரன்அவுட் ஆனார். 

2-வது ஓவரில் உத்தப்பா 1 ரன்னில் ஹோடான் பந்தில் ‘அவுட்’ ஆனார். 12 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது.கேப்டன் காம்பீர் சிறப்பாக ஆடி வெற்றி பெற வைத்தார். அவர் 19 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும். இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

பெங்களூரில் நாளை  நடைபெறும் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ரைசிங் புனேயை சந்திக்கும்.

கொல்கத்தா அணியின் வெற்றி குறித்து கேப்டன் காம்பீர் கூறியதாவது:-

பந்து வீச்சாளர்களின் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. 128 ரன்னுக்குள் ஐதராபாத் அணியை கட்டுப்படுத்தியது அற்புதமானது. பவுலர்களுக்குத்தான் பாராட்டு எல்லாம் சேரும். நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக வீசினார்கள். இதனால் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வர முடிந்தது. 

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. 160 ரன் குவித்து இருந்தால் சிறந்த ஸ்கோராக இருந்து இருக்கும். சிறிய இலக்கில் 3 விக்கெட் போனது சிறிய ஏமாற்றம். ஆனாலும் பொறுப்புடன் ஆடி இருக்கிறோம். 

கடந்த ஐ.பி.எல். போட்டியில் எலிமினேட்டரில் நாங்கள் ஐதராபாத்திடம் தோற்றோம். இதற்கு தற்போது பதிலடி கொடுத்து வெளியேற்றி இருக்கிறோம். மும்பை இந்தியன்சுடன் இதே ஆடுகளத்தில் ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் நாளை சந்திக்கிறோம். அந்த அணிக்கு எதிராக எங்களது சாதனைகள் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனாலும் மும்பைக்கு எதிராக நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 

 

 

 

Source maalaimalar.com

Helloo Salem Free Advertisements