தேசிய திறனாய்வு தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி துவக்கம்      சேலம் மாவட்டத்தில் இதுவரை 33 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்; கலெக்டர் தகவல்      மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன்பிடி தொழில் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மீனவ      நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும்: முதல்வருக்கு      நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க சில எளிய வழிகள்      ஏடிஎம் மையங்கள் முடங்கியது ஏன்?- வங்கி அதிகாரி விளக்கம்      பல வங்கிகளில் பணம் செலுத்தினால் வருமான வரியில் இருந்து தப்பிக்கலாமா? - வங்கி, வருமான வரித்துறை      அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கை பணத்தை முன்கூட்டியே எண்ண நடவடிக்க      ரூ.2,000, ரூ.500 பணம் நிரப்பும்போது ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாப்பு: வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்பட      மின்கட்டணம் செலுத்த ஒருவாரம் கால அவகாசம்      ரூ.500, ரூ.1000 மாற்றும் பணி தீவிரம்: சில இடங்களில் கால தாமதத்தால் மக்கள் வாக்குவாதம்      பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஜஜாரியா தங்கம் வென்று சாதனை      சரத்குமார், ராதாரவி மீது மேலும் ஒரு மோசடி புகார்- என்ன நடக்கின்றது சங்கத்தில்?      ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியை தாண்டிய      பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பத்தம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
வருகிற 27–ந் தேதி மேட்டூர் அணை தூர்வாரும் பணி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
 
வருகிற 27–ந் தேதி மேட்டூர் அணை தூர்வாரும் பணியினை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மே 19, 2017, 05:10 AM
சேலம், 

சேலம் மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது? என்பது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று மாவட்ட கலெக்டர் சம்பத்துடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண தொகை குறித்து கேட்டறிந்ததுடன் அப்பணியை துரிதப்படுத்த துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் வறட்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

கலெக்டருக்கு அறிவுரை 


தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிக்கான நடவடிக்கைகள் குறித்தும், அவற்றை துரிதமாக மேற்கொள்ள கூடுதலாக தமிழக அரசால் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பற்றியும், சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கலெக்டர் சம்பத்துக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக, அரசு அனுமதி பெற்று இலவசமாக எடுத்து பயன்படுத்திட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளின் விபரம், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, பயன்பெற்றுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் குறித்து விவசாய பிரதிநிதிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் போதிய விழிப்புணர்வு மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

இந்த காணொலி காட்சி ஆய்வில் மேட்டூர் சப்–கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)விஜய்பாபு, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் லட்சுமி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

27–ந் தேதி தூர்வாரும் பணி 


முன்னதாக காணொலி காட்சி மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சம்பத், அனைத்து துறை அதிகாரிகளுடன் பொக்லைன் எந்திரம் மூலம் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியினை உடனடியாக தொடங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால், குறுகிய காலத்திற்குள் அனைத்து ஏற்பாடுகளும் செய்வது கடினம் என கூறப்பட்டதால், வருகிற 27–ந் தேதி(சனிக்கிழமை) ஏற்காடு கோடைவிழா–மலர்க்கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, அன்று காலையில் மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக ஓரிரு நாட்களில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அரசு செயலாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், அணையினை தூர்வாரும் பணிக்கான முன்னேற்பாடுகளை செய்ய உள்ளனர். வண்டல் மண்ணை மேட்டூர் அணையில் அள்ளுவதற்கு தகுந்த இடங்களை அடையாளம் காண, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். அது தொடர்பாக தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
 
 
 
 
 
Source maalaimalar.com
Helloo Salem Free Advertisements