நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி தொழிலாளர்கள் ஊர்வலம்
 

29/06 2017 Time: 11:53 Am

இளம்பிள்ளை, 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி மற்றும் அதை சார்ந்த பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறியும், ஜவுளி தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் இளம்பிள்ளை மற்றும் பெருமாகவுண்டம்பட்டி நகர், ரெட்டிமணியகாரனூர், நடுவனேரி, இடங்கணசாலை, காடையாம்பட்டி, தப்பகுட்டை உள்பட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களில் ஜவுளி தொழிலாளர்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ஊர்வலம்

இந்த நிலையில் நேற்று காலை இளம்பிள்ளை சுப்பிரமணியன் கோவில் அருகில் இருந்து ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சந்தைப்பேட்டை, பெருமாகவுண்டம்பட்டி, இடங்கணசாலை பஸ் நிலையம் வழியாக இளம்பிள்ளையை சுற்றி மீண்டும் சுப்பிரமணியன் கோவில் அருகே வந்து முடிவுற்றது.

இதில் ஜவுளி தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இன்று (வியாழக்கிழமை) காலை ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தைபேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

Source maalaimalar.com

Helloo Salem Free Advertisements