நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
2 வாரங்களாக செயல்படாத இ-சேவை மையத்தால் ஏமாற்றம்
 

 

24/8/2017 Time 12:42 Pm

 

சேலம்: சேலம் மத்திய தாலுகா அலுவலகத்தில், இரு வாரங்களுக்கு மேலாகியும், இ - சேவை மையம் செயல்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

 

சேலம் தாலுகா அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி பின்புறம் உள்ள கட்டடத்தில் செயல்பட்டது. தற்போது, மணக்காடு ஏ.டி.சி., பஸ் பணிமனை அருகே, புதிய கட்டடம் கட்டப்பட்டது. அங்கு, கடந்த, 8 முதல், அலுவலகம் செயல்பட தொடங்கியது. அப்போது, இ - சேவை மையமும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு திருத்தம், நகல் எடுப்பது, பட்டா மாறுதல் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக, தினமும், 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இரு வாரங்களாகியும், இ - சேவை மையத்துக்கு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தராததால், எந்த பணியும் நடக்கவில்லை. அலுவலகம் மாற்றப்பட்டது தெரியாமல், பழைய கட்டடத்துக்கு சென்று, மீண்டும் அங்கிருந்து புதிய கட்டடத்துக்கு வந்தும் பணி நடக்காததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். இ - சேவை மைய செயல்பாட்டில், அதிகாரிகள் அலட்சியத்தால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

 

 

 

Source dhinamalar.com

Helloo Salem Free Advertisements