நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்
 

Date : 27/09/2017 Time: 11:02 Am

சேலம்: இரண்டாம் பருவத்துக்கான, பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழகத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. அதில், தற்போது முதல் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 4 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவைப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் எண்ணிக்கை குறித்து, தேவைப்பட்டியல் பெறப்பட்டிருந்தது. அதன்படி, நோடல் (புத்தகம் அனுப்பப்பட்ட பள்ளி) பள்ளிகளுக்கு, புத்தகம் மற்றும் நோட்டுகள் வினியோகிக்கப்பட்டு விட்டன. அங்கிருந்து, தலைமை ஆசிரியர்கள், ஓரிரு நாட்களில், தங்கள் புத்தகங்களை சேகரித்து வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளில், கட்டாயமாக மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Source dhinamalar.com

Helloo Salem Free Advertisements