நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
நாடு முழுவதும் வரும் 20 முதல் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு
 

17/ 11 / 2017 Friday

 

மேட்டூர்:
வரும், 20 முதல், பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதற்காக, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஊழியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது. பிறப்பு, இறப்புகளை, மாநகராட்சி,
நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள்,
ஊராட்சிகளில் வி.ஏ.ஓ.,க்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு, சான்று
வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், இனி பிறப்பு, இறப்பு
சான்றிதழை, கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, வரும், 20
முதல், நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு இணையத்தில் பதிவு செய்யப்படுகிறது.
முதல்கட்டமாக, 2017 அக்., 1 முதல் நடந்த பிறப்பு, இறப்பு விபரங்கள்,
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் பின், தொடர்ச்சியாக நடக்கும்
பிறப்பு, இறப்புகள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இதற்காக, பதிவு
அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. மேட்டூர் தாலுகாவுக்கான முகாம்
நேற்று நடந்தது. சப் - கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ரங்கநாதன் பயிற்சி அளித்தார். மேட்டூர்
நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நங்கவள்ளி,
மேச்சேரி, கொளத்தூர் ஒன்றிய வி.ஏ.ஓ.,க்கள், அரசு மற்றும் தனியார் பிரசவ
மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

 

Source dhinamalar

 
Helloo Salem Free Advertisements