நெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு      முதல்வர் இன்று சேலம் வருகை      நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி      9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு      மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம்      சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது      சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள்.      சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்      சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்      கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு      2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு      வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை      ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்      கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை      சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்     
Search by alphabets :  A  |  B  |  C  |  D  |  E  |  F  |  G  |  H  |  I  |  J  |  K  |  L  |  M  |  N  |  O  |  P  |  Q  |  R  |  S  |  T  |  U  |  V  |  W  |  X  |  Y  |  Z
சேலம்தினம்’ நவம்பர்1 , salemday உருவான வரலாறு
 

சேலம்தினம்’ நவம்பர்1 #salemday

உருவான வரலாறு
சேலம் நகராட்சி 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 

#நவம்பர்1-ந் தேதி #சேலம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1866-ம் ஆண்டு சேலம் நகராட்சி அவைதலைவராக(சேர்மன்) இருந்தவர் அர்புத்னாட். 1917-ம் ஆண்டு ராஜாஜி அவைத்தலைவராக இருந்தார்.

இந்த நிலையில் 1994-ம் ஆண்டு 
ஜூன் 1-ந் தேதி சேலம் மாநகராட்சியாக மாறியது.

சேலம் மாவட்டத்தை பற்றிய வரலாற்றை அறிய வேண்டுமானால், கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய காலங்களில் இருந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சி பகுதியில் இருந்து வந்துள்ளது. பிரிட்டீஸ் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் திப்பு சில்தானுக்கும் இடையே 1792-ல் நடந்த போரைத்தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளை கொண்டு, பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டம் 1792-ல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை கொண்டு பாரமஹால் மற்றும்சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியை தலைநகராக கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தை தலைநகராக கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் 2 ஆக பிரிக்கப்பட்டது. 1801-ம் ஆண்டு இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. 1808-ம் ஆண்டு ஹார்கிரேவ் மாவட்ட கலெக்டராக இருந்தபோது, இதுசேலம் மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது.

மாவட்ட தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830-ம் ஆண்டு மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860-ல் இருந்து கலெக்டர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965-ல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு தர்மபுரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு மே மாதம் சேலம்மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.

Helloo Salem Free Advertisements